சனி, 20 டிசம்பர், 2014

நெய்...

நெய்...

தெரிந்ததும்... தெரியாததும்...
நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள்.
நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

Tirumala Balaji


.


ஞாயிறு, 14 டிசம்பர், 2014

VIRTUAL ROUTER

          சாதா USB இன்டர்நெட் டாங்கிலை wifi டாங்கிலாக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி ?
நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என எல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1. முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://virtualrouter.codeplex.com
2. Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும். Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3. இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டியது அவசியம்.

வியாழன், 11 டிசம்பர், 2014

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்



நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செ

ய்யுங்கள்...!

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....
படித்துவிட்டு அதிகம் பகிருங்கள்...!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

உண்மையை உரக்க சொல்

நாம் கண்டிப்பாக்க பாக்கவேண்டிய பதிவு !! கொஞ்சம் பாருங்களேன், உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிருங்கள் !!



வியாழன், 4 டிசம்பர், 2014

HOW TO SHARE YOU LAPTOP OR PC INTERNET TO WIFI DEVICE


உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது !!!


HOW TO SHARE YOU LAPTOP OR PC INTERNET TO WIFI DEVICE (Mobile Phone Or Tablet Or Any Wifi Device) !!


  1.   முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ....



2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...


netsh wlan show drivers இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில் Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம்.


3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம் ....
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=passwordasd


இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் .   


இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம்.




4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும். உடனடியாக Wifi Activate ஆகிவிடும்
.


netsh wlan start hostednetwork அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது....


5. Activate செய்த Wifi De-Activate எப்படி ??? கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும். உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும்.


netsh wlan stop hostednetwork

அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது.. கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும் !!! :)
  • 1