மாணிக்கம் ராமஸ்வாமி (1954-2017) - நேர்மைவழி நின்று ஜெயித்த தொழிலதிபர்!
அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தியன்று லாயல் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மாணிக்கம் ராமஸ்வாமி மறைந்தார் என்கிற செய்தி, தமிழகத் தொழில் துறை வட்டாரத்தையே உலுக்கியது. 63 வயதான அவரை, மரணம் அத்தனை சீக்கிரத்தில் அழைத்துச் செல்லும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள் என்பதால், அதிர்ச்சி பலமடங்கு அதிகமானதாகவே இருந்தது.
தொழில் துறையிலிருக்கும் பல ஆயிரம் தொழி லதிபர்களில் தனக்கென தனி மரியாதையைப் பெற்றிருந்தார் மாணிக்கம் ராமஸ்வாமி. ‘கலைத் தந்தை’ கருமுத்து தியாகராஜ செட்டியாரின் பேரன், பணத்துக்குப் பஞ்சமில்லாத பரம்பரை என்றாலும், ஏழைகளுக்காக இரங்கும் எண்ணம் அவர் நெஞ்சம் முழுக்க நிறைந்திருந்தது.
ரூ.1.5 கோடி முதல் ரூ.1,500 கோடி...
சென்னை ஐ.ஐ.டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் தங்கப்பதக்கம் வாங்கியவுடன் ஆராய்ச்சி செய்து, டாக்டர் பட்டம் பெற நினைத்தார் மாணிக்கம் ராமஸ்வாமி. ஆனால், தன் குடும்பத்துக்குச் சொந்தமான லாயல் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் நிறுவனத்தை, தலைமை யேற்று நடத்தவேண்டிய பொறுப்பு அவரைத் தேடிவந்தது. 1976-ல் அவர் அந்த நிறுவனத்துக்குத் தலைமையேற்றபோது அதன் வருவாய், ஆண்டுக்கு வெறும் 1.5 கோடி ரூபாய் மட்டுமே. குறுகிய காலத்தில் அதனை ரூ.150 கோடியாக உயர்த்தினார் அவர். இன்றைக்கு அந்த நிறுவனத்தின் விற்றுவரவு சுமார் 1,500 கோடி ரூபாய்.
தமிழகத்தைச் சேர்ந்த மிகச் சில தொழில் நிறுவனங்களே பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆனால், 17 ஆண்டுகளுக்குமுன்பே தனது லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தை மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட்டார் மாணிக்கம் ராமஸ்வாமி.
நேர்மை வழிநின்று ஜெயித்தவர்
பிசினஸ் செய்யும்போது அதை நேர்மையாகச் செய்ய வேண்டுமென்று நினைக்கும் தொழிலதிபர்கள் மிகச் சிலரே. ஆனால், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை; பிசினஸை நேர்மையாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தார் மாணிக்கம் ராமஸ்வாமி.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை ஒருமுறை சந்தித்தார் அவர். ‘ஆந்திராவில் தொழில் தொடங்குங்கள்; உங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை உடனே ஆர்ஜிதம் செய்கிறேன்’ என்றார் ஆந்திர முதல்வர். பிற தொழிலதிபர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி, அங்கு தொழில் எதுவும் தொடங்காமல் அப்படியே போட்டு வைத்திருந்தனர். ஆனால், ‘‘விவசாயிகளுக்குச் சேரவேண்டிய நியாயமான விலைக்கு எனக்கு நிலத்தைத் தந்தால் போதும். சந்தை மதிப்பைவிடக் குறைந்த விலையில் நிலத்தை வாங்கிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை’’ என்று வலியுறுத்தியதோடு, நிலம் கிடைத்த சில ஆண்டுகளிலேயே அங்கு தொழிற்சாலையையும் ஆரம்பித்தார்.
அரசாங்கம் பணக்காரர்களுக்கா?
அரசின் கொள்கைகள் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் மாணிக்கம் ராமஸ்வாமி. பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் தொழில் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றவர், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தொழிலதிபர்களைக் (Crony Capitalism) கடுமையாகச் சாடினார்.
உதாரணமாக, உலக அளவில் சிமென்ட் குறைவான விலையில் கிடைக்கும்போது, அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவிடாமல் தடுக்கும் கொள்கைகளை அரசாங்கம் உருவாக்கி வைத்திருப்பதை அவர் எதிர்த்தார். அதிக விலையில் விற்கப்படும் உள்நாட்டு சிமென்ட்டினை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படுவதால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் யாரோ சிலரின் ‘பை’களை நிரப்புவதைக் கண்டித்தார். மானியம் என்கிற பெயரில், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏழைகளுக்காக யோசித்தவர்
அவர் மிகப் பெரிய பிசினஸ்மேனாக இருந்த போதிலும், ஏழைகளுக்காக எப்போதும் யோசித்த வர். தனது மில்லில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் குறைந்தபட்ச வசதிகளுடனாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். தனது மில்லில் தங்கி வேலை பார்க்கும் 2,000 தொழிலாளர் களுக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல்லரிசி உணவே வழங்கினார்.
மதுபானத்துக்கு அடிமையாகி உயிரை இழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில், அவர்களின் வீட்டுப் பெண்களுக்குத் தனது மில்லில் முன்னுரிமை அடிப்படையில் வேலை தந்தார். பெண்கள் வீட்டு வேலை செய்வதுடன் நின்றுவிடாமல், ஏதாவது ஒரு தொழில்செய்து சம்பாதிக்க வேண்டும் என்றார்.
சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பெண்களே எதிர்க்கும் நிலை பல வீடுகளில் இருப்பதைக் கண்ட அவர், மருமகளை வேலைக்கு அனுப்ப மாமியாரிடம் பேசி சம்மதிக்க வைப்பதற்காகவே ஒரு பெண்ணை வேலைக்கு நியமித்தார். இப்படி வேலை பார்க்கத் தொடங்கிய பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதைப் பெருமையோடு பார்த்துப் பூரித்தார் அவர்.
பொருளாதார வளர்ச்சி பற்றி யோசித்தவர்
நம் பொருளாதாரம் வளர்ச்சியடைய, மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மாணிக்கம் ராமஸ்வாமி தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். நம்மைவிட சிறிய நாடான பங்களாதேஷ் ஏற்றுமதியில் சிறந்து விளங்க, நாம் மட்டும் அந்தத் துறையில் முன்னேறாமல் இருப்பதற்கான காரணங்களை அவர் அடுக்கினார். அவரது சிந்தனைகளைத் தொடர்ந்து கவனித்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், அவரை நேரில் அழைத்து, பல்வேறு விஷயங்கள் குறித்து அவரது கருத்தைக் கேட்டார். அவர் பரிந்துரை செய்த விஷயங்களில் சிலவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசிடம் சிபாரிசு செய்தார் அர்விந்த் சுப்பிரமணியன்.
தொழில் வழிகாட்டி
தானுண்டு, தன் தொழிலுண்டு என்று நினைக் காமல், தான் சார்ந்த தொழில் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். ஜவுளித் தொழில் அமைப்பான டெக்ஸ்புரோசில் (TEXPROCIL) அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பின் (CII) தமிழகப் பிரிவின் தலைவராகப் பதவி வகித்தார்.
‘ராமு சார்’ எனத் தனது தொழில் துறை நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் மாணிக்கம் ராமஸ்வாமி. நேர்மையாகத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்த பல தொழிலதிபர்கள், அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுடன், அவரை அடிக்கடி சந்தித்து தொழில் தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றனர். லைஃப்செல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எஸ்.அபயகுமார், ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்த பத்மநாபன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் முரளி மகாதேவன், பாரத்மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முருகவேல் ஜானகிராமன், ‘பொன்ப்யூர்’ நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.பொன்னுசாமி, கவின்கேர் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சி.கே.ரங்கநாதன், விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், இன்டெக்ரா நிறுவனத் தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீராம் சுப்ரமண்யா ஆகியோர் அடிக்கடி அவரைச் சந்தித்து தொழில் தொடர் பான யோசனைகளைப் பரிமாறிக் கொள்வதை வழக்கமாகவே கொண்டிருந்தனர்.
தொழில் வளர்வதன் மூலம் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று நினைத்த மாணிக்கம் ராமஸ்வாமி மறைந்தது, நம் எல்லோருக்குமே ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு!
-ஏ.ஆர்.குமார்

முருகவேல் ஜானகிராமன், நிர்வாக இயக்குநர், பாரத் மேட்ரிமோனி.காம்
‘‘நேர்மை தவறாத மாமனிதர்!’’
‘‘தர்மத்தின்படி மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால், ஒரு கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார். தனக்கு நன்மை கிடைத்தாலும், நாட்டுக்குத் தீங்கு விளையுமெனில் அதைக் கடுமையாக எதிர்ப்பார். அவர் யாருக்கும், எதற்கும் அஞ்சியதில்லை. கர்மாமீது அவருக்கு முழுமையான நம்பிக்கையிருந்தது. அவரைப் போன்ற ஒரு மனிதரை நான் பார்த்ததேயில்லை. என் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போலத்தான் அவரது இழப்பை நான் உணர்கிறேன்.’’

ஸ்ரீராம் சுப்பிரமண்யா, நிர்வாக இயக்குநர், இன்டெக்ரா சாஃப்ட்வேர் சர்வீசஸ் பி.லிமிடெட்.
‘‘அக்கறை காட்டுவதில் அவர்போல் யாருமில்லை!’’
‘‘தனது ஊழியர்கள் மீதும், சமூகத்தின் மீதும், நண்பர்கள் மீதும் அவர் காட்டிய அக்கறையைப் போல வேறு யாரும் காட்ட முடியாது. தனது நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஐந்து சதவிகிதத்தைத் தனது ஊழியர்களின் நலனுக்காக செலவழித்தார். எங்களைப் போன்ற தொழிலதிபர்கள் அரசு விதிமுறைகள் எதையும் மீறக்கூடாது என்பதை வலியுறுத்துவார். என் மகன் மேற்படிப்பு படிக்க எங்கு போகலாம் என்று கேட்டபோது, லண்டனில் உள்ள புகழ்பெற்ற வார்விக் கல்லூரியைப் பரிந்துரைத்தார். சுருக்கமாக, அவர் ஓர் உதாரண புருஷர்!’’

எம்.பொன்னுசாமி, நிர்வாக இயக்குநர், பொன்ப்யூர் கெமிக்கல்ஸ். ‘‘அபூர்வமான மனிதர்!’’
‘‘நாட்டுக்கு நல்லது எதுவோ, அதைப் பற்றி மட்டுமே அவர் பேசுவார். ஒருவர் தவறு செய்கிறார் என்றால், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் தயங்காமல் எடுத்துச் சொல்வார். அவரே தவறு செய்தால், அதை ஒப்புக்கொள்ளத் தயங்கமாட்டார். அரசாங்கம் அளிக்கும் மானியமானது உரியவர்களுக்குச் சரியாகப் போய் சேரவேண்டும் என்பதை வலியுறுத்துவார். தனது மில்லில் வேலை தரும்போதுகூட கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளித்தார். தொழில் துறை வட்டாரத்தில், அவர் ஒரு மிக, மிக அபூர்வமான மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும்.’’

சி.கே.ரங்கநாதன், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், கவின்கேர் பிரைவேட் லிமிடெட்.
‘‘முற்போக்குச் சிந்தனையாளர்!’’
‘‘அரசின் கொள்கைகள் எங்கெல்லாம் தவறாக இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். பெரு முதலாளிகள் அதிக லாபம் சம்பாதிக்கும் வழிகளைத் தடுக்க வேண்டும் என முற்போக்காக யோசித்ததால், அவரை ஒரு ‘தாட் லீடர்’ எனலாம். பொதுவாக, மூலப்பொருளின் விலை உயர்ந்தால், பொருளின் விலையை உயர்த்தி விற்பது வழக்கம். பிற்பாடு மூலப்பொருளின் விலை குறைந்தால், பொருளின் விலையை யாரும் குறைக்கமாட்டார்கள். ஆனால், மாணிக்கம் ராமஸ்வாமியோ மூலப்பொருள் விலை குறைந்தபோது, தானே முன்வந்து பொருளின் விலையைக் குறைத்தார். இந்த நேர்மையான அணுகுமுறையால், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.’’

பா.சீனிவாசன், நிர்வாக இயக்குநர், விகடன் குழுமம்.
‘‘சமூக நீதியரசர்!’’
‘‘நண்பாஸ்’ என்று எங்களை அன்போடு அழைக்கும் ராமு சார், ஒரு தீர்க்கதரிசி. நாட்டுக்கு நல்லது நடக்கும் எனில், அதனால் தனக்கோ, தன் தொழிலுக்கோ பின்னடைவு ஏற்படும் என்றாலும்கூட, ராமு சார் அதை அழுத்தமாக ஆமோதிக்கும் தன்னலமற்ற போராளி. எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், ஆழமாக ஆய்வுசெய்து, அத்தனை கோணங்களையும் அலசியபின் மட்டுமே கருத்து கூறுவார். அவர் ஒரு சமூக நீதியரசர்.
பிறர் பிரச்னைகளைத் தன் பிரச்னையாகக் கருதி, குறிப்பாக பெண்கள் நலனுக்கு அயராது பாடுபட்டு, அவர்களது சுதந்திரமே நாட்டின் பொருளாதாரத்தின் ரகசியம் என வாழ்ந்து காட்டிய கர்மயோகி. உற்சாகத்திலும், துள்ளலிலும் ஒரு குழந்தையாக, தினம் தினம் புதியவற்றைக் கற்று வியப்பதில் நிரந்தர மாணவராக, இயந்திரத்தில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளியாக, இல்லத்தரசிக்கு நிகராக வீட்டுப் பணிகளில் கவனம் செலுத்துவதில் அவதார புருஷனாக, தவறான கருத்தென்றால் யாரென்றும் பாராமல் கண்டிப்புடன் மிரட்டும் தகப்பனாக, நமக்குத் தெரியாத நற்குணங்களை நம்மிடையே தூண்டி செயல்பட ஊக்குவிக்கும் ஆசானாக, எட்டாத உச்சத்தையும் எட்டவைக்க நம்பிக்கையூட்டும் துரோணாச்சாரியாராக, எல்லாத் தவறையும் மன்னித்துக் கர்மத்தின் பாதையில் செயல்பட வைக்கும் ஆன்மிகத் தத்துவ ஞானியாக ராமு சார்... உங்கள் அவதாரங்கள் விஸ்வரூபமாய் என்றும் என் கண்முன் நிற்கும்!’’

முரளி மகாதேவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
‘‘நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்!’’
‘‘அந்த அற்புதமான மனிதரின் குணநலன்களை வார்த்தைகளில் சொல்லிப் புரியவைக்க முடியாது. ஊழியர்களோ, நண்பர்களோ, யாராக இருந்தாலும் தன்னால் எப்படி உதவ முடியும் என்று பார்ப்பார். அவர் செய்கிற எந்த உதவியாக இருந்தாலும் எந்தப் பிரதிபலனையும் அவர் எதிர்பார்த்ததில்லை. மற்றவர்கள்மீது அவர் வைத்த அன்பு வெறும் உணர்வுபூர்வமான ‘எமோஷனலான’ விஷயமல்ல; அறிவுபூர்வமானது. எல்லோரையும் வாஞ்சையுடன் அரவணைத்துக்கொள்வார். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவரை நாங்கள் இழந்தது பெரும் இழப்பு!’’

எஸ்.அபயகுமார், தலைவர், லைஃப்செல் இன்டர்நேஷனல் பி.லிமிடெட்
‘‘கர்மாவின்படி நடந்தவர்’’
‘‘அரசுக் கொள்கைகளில் தவறுகள் இருந்தால், அதை அஞ்சாமல் எடுத்துச்சொல்வார். அவர் சொல்வதிலிருக்கும் நியாயத்தை அரசாங்கமே புரிந்து கொண்டு, அவரை ஆலோசனை கமிட்டியில் பலமுறை சேர்த்திருக்கிறது. தனக்கோ, தான் சார்ந்த தொழில் துறைக்கோ நல்லது என்று மட்டும் நினைக்காமல் நாட்டுக்கு நல்லது எதுவோ, அதையே செய்ய நினைப்பார். நேர்மை, நியாயம் தவறாமல் இருந்ததால், அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். அதற்காக அவர் ஒருபோதும் வருந்திய தில்லை. தரத்துக்கு மட்டுமே அவர் மரியாதை தந்தார். அதனால்தான் அவரால் ஏற்றுமதியில் சிறந்து விளங்க முடிந்தது. நல்லது செய்தால், நல்லதே நடக்கும் என்கிற கர்மாவின்படி நடந்தவர் அவர்.’’

ஜி.ஆர். அனந்த பத்மநாபன், நிர்வாக இயக்குநர், ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ்
‘‘வைராக்கியத்தோடு வாழ்ந்தவர்!’’
“இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட ஒரு மனிதரா என எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தவர். ஆத்மார்த்தமான நண்பராகவே அவர் எனக்கிருந்தார். இப்படித்தான் வாழ வேண்டும் என வைராக்கியத்தோடு வாழ்ந்தவர் அவர். எந்தச் சூழ்நிலையிலும் தன் வைராக்கியத்தை விட்டுத் தராதவர்.
சிலபேர் சில இடங்களுக்குச் சென்றாலே அந்த இடமே புனிதமாகிவிடும் என்பார்கள். அந்தச் சிலரில் ராமு சாரும் ஒருவர். எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கக்கூடிய மனிதநேயர் அவர்.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக