'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல்
''ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள்.
நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன்.
சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காமல் இன்றைக்கு யாரும் இருப்பது கிடையாது. அந்தளவுக்கு தங்கம் நமக்கு தவிர்க்க முடியாத மிக முக்கியப் பொருளாகிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்துள்ளோம்.
பணக்காரர்கள் ஏமாந்தால் அது அவர்களுக்கு ஒரு விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், தினம் தினம் உழைத்து குருவி சேர்ப்பதுபோல் சேர்த்த பணத்தில் தங்கம் வாங்கும் ஏழைகள் ஏமாறுவது எந்த விதத்தில் நியாயம். இன்றைக்கு தினமும் அதுதான் நடந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். அதனால், இன்றைக்கு அதிகமான நகைக் கடைகள், தரமான நகை, அது இது என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
'ஹால்மார்க்' முத்திரையோடு விற்கிறோம் என்று சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்குகிறார்கள். உண்மையில் இன்றைக்கு விற்கப்படும் தங்கத்தில் சராசரியாக 100-க்கு 60 சதவிகிதம் மட்டுமே தங்கம் உள்ளது. 40 சதவிகிதம் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. கலப்படத்திலும் இன்றைக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்பது உச்சகட்ட கொடூரம். நாமும் இதெல்லாம் தெரியாமல் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவது வேதனையிலும் வேதனையான ஒன்று.
எனவே, இதை முடிந்தவரை தடுத்து நிறுத்த பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த போதிய விழிப்புணர்வை பெறவேண்டியது மிகமுக்கியம். அதற்காகத்தான் நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம். முடிந்தவரை தங்கம் வாங்குவதை தவிருங்கள். இப்போது அரசாங்கத்திடம் இதுபோன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு ஒன்றை கொடுக்க உள்ளோம். மும்பை போன்ற இடங்களில் தங்கம் விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், இங்கேயும் வந்தால் தங்கம் விஷயத்தில் இனியும் மக்கள் ஏமாறுவதை தடுக்கலாம்" என்றவர்,
''வரும் 21-ம் தேதி தங்கம் வாங்க உகந்த நாள் என்று சொல்லப்படும் அக்க்ஷய திரிதியை கொண்டாடப்படவிருக்கிறது. இதனால் தங்கம் விஷயத்தில் இன்னும் பலவித ஏமாற்றங்களும், மோசடிகளும் நடக்கக்கூடும். எனவே, மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.." என்று கோரிக்கை வைத்தவர், தங்கம் குறித்த இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களையும் பட்டியலிட்டார்.

நன்றி விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக