ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அண்ட்ராய்ட் பயன்பாடுகள் இப்போது விண்டோஸ் கணிணியிலும்

அண்ட்ராய்ட் பயன்பாடுகள் இப்போது விண்டோஸ் கணிணியிலும்:
தொழில்நுட்ப பதிவு போட்டு ரொம்பநாளாகி விட்டது. தொழில்நுட்பங்களை நொடிக்கு நொடி விளாசி பேசும் தளங்கள் பெருகிவிட்டதும், எந்த ஒரு சமாசாரமுமே எழுத உந்தும் அளவு மனதை பாதிக்காததும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். எங்கிருந்தோ திடீரென்று வந்த நண்பர் ஒருவர் ஒரு நல்ல தகவலை சொல்லிச் சென்றார். அந்த நண்பருக்கு நன்றிகள் பல.உங்கள் அண்ட்ராய்ட் செல்பேசிகளில் நீங்கள் பயன்படுத்தும் உங்கள் அபிமான பயன்பாடுகளை இப்போது விண்டோஸ் கணிணியிடும் பயன்படுத்தலாமாம். BlueStacks app player எனும் மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிவிட்டால் போதுமானது. அதே மொபைல் அப்ளிகேசன் பெரிய திரையில் உங்கள் கணிணியில் நல்ல வேகமாக ஓடுமாம். அப்ளிகேசன் டெவலப் செய்பவர்கள் கூட இதை சோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாமென நினைக்கிறேன். நல்ல புதுமையான முயற்சி. பீட்டாவாக இப்போது இருக்கும் போது இலவசம். முழுமையானதும் விற்கப்படலாம். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சொல்லிட்டேன் எம்லின் சார்.நன்றி.
Follow me in Facebook
http://www.facebook.com/pkpblog
Source:pkp.blogspot.com Copyright 2011 www.PKP.in;. All rights reserved. Click here to email us

கருத்துகள் இல்லை: