கூல் கூல் காய் - கனிகள்... ஜில் ஜில் உணவுகள்!
கத்தரி வெயில் கதகளி ஆடிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. வெயிலைக் கொடுக்கும் இயற்கை, அதை சமாளிக்க உதவும் காய் - கனிகளை வாரிவழங்குவதிலும் குறை வைப்பதில்லை. தர்பூசணி, வெள்ளரி, எலுமிச்சை, இளநீர், நுங்கு என்று சமய சஞ்சீவினிகளாக விளங்கும் காய் - கனி வகைகள், வெயிலின் தாக்கத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்க, கடைவீதிகளில் குவிந்து கிடக்கின்றன. இவற்றை அப்படியே சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், ஜூஸ், சர்பத், மில்க் ஷேக், லஸ்ஸி, சாலட், கூட்டு என தயாரித்து சாப்பிட்டால்... இரட்டை கொண்டாட்டம்தானே! இந்த இணைப்பிதழில் வெரைட்டியான, வித்தியாசமான கோடை உணவுகளை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
தர்பூசணி - ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன், சர்க்கரை சிரப் - 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு, தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) - 10.

செய்முறை: தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ் கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஒரு கம்பிப் பதம் வந்ததும் இறக்கினால், சர்க்கரை சிரப் தயார்.

இளநீர் - தர்பூசணி டிலைட்
தேவையானவை: இளநீர் - 2 கப், தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள், இளநீர் வழுக்கை - தலா ஒரு கப், சர்க்கரை - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாதி அளவு தர்பூசணியை மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கி, 8 கட்டிகள் வரும் விதத்தில் ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் உறைய வைக்கவும். மிக்ஸியில் இளநீர் வழுக்கை, சர்க்கரை, தர்பூசணித் துண்டுகளை சேர்த்து அடித்து... இளநீர், எலுமிச்சைச் சாற்றுடன் நன்றாகக் கலந்து, கிளாஸ்களில் ஊற்றி, ஒவ்வொரு கிளாஸிலும் 2 தர்பூசணி ஐஸ்கட்டிகளை மிதக்கவிட்டால்... இளநீர் - தர்பூசணி டிலைட் ரெடி.

தர்பூசணி ஷேக்
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - அரை கப், புளிக்காத புதிய தயிர் - ஒரு கப், ஸ்ட்ராபெர்ரி - 5 (லேசாக தோல் சீவி, துண்டுகளாக்கவும்), சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், கிவிப்பழம் - 2, புதினா இலைகள் - தேவையான அளவு.
செய்முறை: கிவிப்பழத்தை நறுக்கவும். 4 கிவிப்பழ துண்டுகள், 4 தர்பூசணி துண்டுகள் இவற்றை எடுத்துத் தனியே வைக்கவும். மீதியுள்ள தர்பூசணி, கிவி, ஸ்ட்ராபெர்ரி, தயிர், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அடித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து, கண்ணடி டம்ளர்களில் ஊற்றவும். ஒவ்வொரு டம்ளரிலும் ஒரு துண்டு கிவி, ஒரு துண்டு தர்பூசணி, ஒன்றிரண்டு புதினா இலை சேர்த்து அலங்கரிக்கவும்.

தர்பூசணி - ரோஜா டிரிங்க்
தேவையானவை: தர்பூசணி சாறு - ஒரு கப், ரோஸ் சிரப் - 3 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு, சப்ஜா விதை - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சப்ஜா விதைகளை 2 மணி நேரம் ஊறவைக்கவும். மற்ற எல்லாவற்றையும் (ஐஸ்கட்டிகள் நீங்கலாக) நன்றாகக் கலந்து, ஊறிய சப்ஜா விதைகள், ஐஸ்கட்டிகள் சேர்த்து சுவைக்கவும்.

தர்பூசணி குல்ஃபி
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 4 கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், க்ரீம் - 6 டேபிள்ஸ்பூன், ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன், கோகோ பவுடர் - சிறிதளவு.
செய்முறை: க்ரீமை பீட்டரில் (beater) போட்டு அடிக்கவும். தர்பூசணி, சர்க்கரையை மிக்ஸியில் போட்டு அடிக்கவும். இரண்டையும் கலந்து கோகோ பவுடர், ரோஸ் சிரப் சேர்த்துக் கலந்து குல்பி மோல்டில் ஊற்றி, `ஸ்டிக்’கை செருகி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசர் பகுதியில்) வைத்திருந்து, மறுநாள் காலை எடுத்து சுவைக்கவும்.

தர்பூசணி - இஞ்சி பானம்
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - ஒரு கப், தோல் நீக்கி, மெல்லியதாக சீவிய இஞ்சித் துண்டுகள் - 5, எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், புதினா இலைகள் - 10, நறுக்கிய எலுமிச்சை வில்லைகள் - 2, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: தர்பூசணித் துண்டுகள், இஞ்சித் துண்டுகள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸியில் அடிக்கவும். கிளாஸ்களில் 2, 3 ஐஸ்கட்டிகள் போட்டு, தர்பூசணி ஜூஸை ஊற்றி... புதினா இலைகள், எலுமிச்சை வில்லை கொண்டு அலங்கரிக்கவும்.

தர்பூசணி அடை
தேவையானவை: தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப், புழுங்கல் அரிசி - 2 கப், துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியை துருவி, அரைத்த மாவுடன் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

தர்பூசணி சர்பத்
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 2 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு, சாட் மசாலா, மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன், புதினா இலைகள் - 2 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: புதினா இலைகளையும், ஐஸ்கட்டிகளையும் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். கிளாஸ் டம்ளர்களில் ஐஸ்கட்டிகளைப் போட்டு, மேலே மிக்ஸியில் அடித்த சர்பத்தை ஊற்றி, சில புதினா இலைகளைத் தூவவும்.

தர்பூசணி ரசம்
தேவையானவை: புளித்தண்ணீர் - ஒரு கப், தர்பூசணி சாறு - 2 கப், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடிக்க: நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மிளகு, துவரம்பருப்பு, மல்லி (தனியா) - தலா ஒரு டீஸ்பூன்
தாளிக்க: நெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும், வறுத்துப் பொடித்ததை சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் மசித்தபருப்பை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாற்றை ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்த்து... ஒரு கொதி வந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

தர்பூசணி தோல் பொரியல்
தேவையானவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய தர்பூசணியின் வெள்ளைத் தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப், சீரகம் - அரை டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: அடிகனமான வாணலியில் எண்ணெய், நெய், இரண்டையும் ஊற்றி சீரகம் தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி... மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்துக் கிளறி, நறுக்கிய தர்பூசணி வெள்ளைத் தோலையையும் சேர்த்து மேலும் வதக்கவும். கால் கப் நீர் ஊற்றிக் கிளறி, எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தர்பூசணி ஸ்மூத்தி
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - இரண்டரை கப், தேங்காய்ப்பால் - அரை கப், வாழைப்பழம் - ஒன்று (துண்டுகளாக்கவும்), வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், தர்பூசணி ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு (தர்பூசணி சாற்றை ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்)
செய்முறை: தர்பூசணித் துண்டுகள், தேங்காய்ப்பால், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து... ஐஸ்க்ரீம், வாழைப்பழம் சேர்த்துக் கலக்கவும். இதை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே தர்பூசணி ஐஸ்கட்டிகளை மிதக்கவிடவும்.

கார்பூஜா ரசாயனா
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - அரை கப், துருவிய வெல்லம் - கால் கப், அவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கிர்ணிப்பழத் துண்டுகளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்துப் பால் எடுக்கவும். தேங்காய்ப்ப் பாலுடன் துருவிய வெல்லம், அவல், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஊறியதும், ஃப்ரிட்ஜில் இருந்து கிர்ணிப்பழத் துண்டுகளை எடுத்து சேர்க்கவும்.
இது, ராஜஸ்தானில் மிகவும் பிரசித்தி பெற்ற டிஷ்.

கிர்ணிப்பழ லஸ்ஸி
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், பன்னீர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், புளிக்காத புதிய தயிர் - ஒரு கப், ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள எல்லாவற்றையும் (ஐஸ்கட்டிகள் நீங்கலாக) சேர்த்து மிக்ஸியில் அடித்து கிளாஸ்களில் ஊற்றி, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டுப் பருகவும்.

கிர்ணிப்பழ மில்க் ஷேக்
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், காய்ச்சி, ஆறவைத்த பால் - 2 கப், சர்க்கரை - 8 டேபிள்ஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கிர்ணிப்பழத் துண்டுகள், பால், சர்க்கரை, தேன் ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து, வெனிலா ஐஸ்க்ரீமையும் சேர்த்துப் பரிமாறவும்.

நுங்கு கீர்
தேவையானவை: தோல் நீக்கி, துண்டுகளாக்கிய பனை நுங்கு - 2 கப், பால் - அரை லிட்டர், கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கப், சாரைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பாதி அளவு நுங்கை சிறுசிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும். மீதி நுங்கை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, சர்க்கரை சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும் கண்டன்ஸ்ட்டு மில்க் சேர்த்து இறக்கி ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அரைத்த நுங்கு விழுது, துண்டுகளாக்கிய நுங்கு சேர்த்துக் கலந்து, ஏலக்காய்த்தூள், சாரைப்பருப்பு சேர்த்துப் பருகலாம்.

நுங்கு சர்பத்
தேவையானவை: தோல் நீக்கி, துண்டுகளாக்கிய பனை நுங்கு - ஒரு கப், நன்னாரி சிரப் (மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 3 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: நுங்கை மிக்ஸியில் அடித்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்னாரி சிரப்பையையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து, ஐஸ்கட்டிகளையும் சேர்த்து (தேவைப்பட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்) நீளமான கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிச் சுவைக்கவும்.
குறிப்பு: நன்னாரி சிரப் இல்லாவிட்டால், நாட்டு மருந்து கடையில் நன்னாரி வேரை வாங்கி 4, 5 துண்டுகளை ஒரு கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். அது அரை கப் ஆக வற்றியதும் இறக்கி, ஆறியதும் வடிகட்டி, தேவையான சர்க்கரை சேர்த்து உபயோகிக்கலாம்.

நுங்கு - கிர்ணி கஸ்டர்ட்
தேவையானவை: தோல் நீக்கி, துண்டுகளாக்கிய நுங்கு - அரை கப், தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - கால் கப், துண்டுகளாக நறுக்கிய இளநீர் வழுக்கை - 4 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், வெனிலா கஸ்டர்ட் பவுடர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன், பாதாம், பிஸ்தா - தலா 6 (ஊறவைக்கவும்), சர்க்கரை - கால் கப்.
செய்முறை: பாதாம், பிஸ்தா இரண்டையும் நைஸாக அரைக்கவும். பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். மிதமான சூடு வந்ததும் கால் கப் பாலைத் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, மீதி கொதிக்கும் பாலில் அரைத்த பாதாம் - பிஸ்தா விழுதை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து கொதிக்கும் பாலில் ஊற்றி ஓரிரு கொதிகள் வந்ததும் இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு எடுத்து, துண்டுகளாக்கிய நுங்கு, கிர்ணிப்பழம், இளநீர் வழுக்கை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வெள்ளரி ராய்த்தா
தேவையானவை: மெல்லியதாக நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சு - அரை கப், கெட்டித் தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிரையும் உப்பையும் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து தயிருடன் சேர்க்கவும். நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சையும் சேர்க்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரிக்கவும்.
இந்த வெள்ளரி ராய்த்தாவை அப்படியே சாப்பிடலாம். கலந்த சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

வெள்ளரிப் பிஞ்சு சாட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சு - அரை கப், அரிசிப்பொரி - 6 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய மாங்காய் - 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... வெங்காயம், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, தக்காளி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிடவும். அந்த சூட்டிலேயே குடமிளகாய், அரிசிப்பொரி, மாங்காய் சேர்த்து, இறுதியில் வெள்ளரிப்பிஞ்சையும், கொத்தமல்லித்தழையையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வெள்ளரி - தக்காளி சாலட்
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் - ஒரு கப், சிறியதாக நறுக்கிய தக்காளி - கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

வெள்ளரி - வெங்காய சாலட்
தேவையானவை: வட்டமாக நறுக்கிய வெள்ளரி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (வட்டமாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
குறிப்பு: கொத்தமல்லித் தழையையும் இதனுடன் சேர்க்கலாம்.

வெள்ளரி தயிர் பச்சடி
தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒன்று, முள்ளங்கி - 2, கேரட் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, கெட்டி அவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கேரட் துருவியில் வெள்ளரியைத் தோலுடன் துருவி தனியே வைக்கவும். கேரட், முள்ளங்கியையும் துருவி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... துருவிய முள்ளங்கியை சேர்த்து வதக்கி, ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, அவல் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி, நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், வெள்ளரித் துருவல், வதக்கிய முள்ளங்கித் துருவல் கலவை ஆகியவற்றை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்துக் கலந்துவிடவும்.

இளநீர் - கல்கண்டு பானம்
தேவையானவை: இளநீர் - முக்கால் கப், இளநீர் வழுக்கை - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, கல்கண்டு - 75 கிராம்.
செய்முறை: இளநீர், இளநீர் வழுக்கை இரண்டையும் மிக்ஸியில் அடித்து, தோல் சீவி நசுக்கிய இஞ்சியையும், பொடித்த கல்கண்டையும் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும். பிறகு, வடிகட்டி இஞ்சியை எடுத்துவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சுவைக்கவும்.

இளநீர் - பைனாப்பிள் ஜூஸ்
தேவையானவை: இளநீர் - 2 கப், இளநீர் வழுக்கை - ஒரு கப், பைனாப்பிள் துண்டுகள் - 2 கப், சுகர் சிரப் - 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: இளநீர் வழுக்கை, பைனாப்பிள் துண்டுகள், சுகர் சிரப் மூன்றையும் மிக்ஸியில் அடித்து, இளநீர் சேர்த்துக் கலக்கவும். இதை கிளாஸ்களில் ஊற்றி ஐஸ்கட்டிகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

வெள்ளரிக்காய் கூட்டு
தேவையானவை: வெள்ளரிக்காய் - 2, வேகவைத்த பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 3 இலைகள், சீரகம் - அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை டேபிள்ஸ்பூன்
தாளிக்க: தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.
செய்முறை: அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, நறுக்கிய வெள்ளரியையும் சேர்த்து வேகவிடவும் (விரைவில் வெந்துவிடும்). பிறகு, வேகவைத்த பயத்தம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து ஓரிரு கொதிகள் வந்ததும், தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

கிர்ணிப்பழ டேங்கோ
தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - 2 கப், ஆரஞ்சு சுளைகள் - 8, இளநீர் - 2 கப், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், கறுப்பு உப்பு - அரை டீஸ்பூன், புதினா இலைகள், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சு சுளைகளை தோல், விதை நீக்கி மிக்ஸியில் அடித்து, அந்த ஜூஸை ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஃப்ரீசரில் உறைய வைக்கவும். கிர்ணிப்பழம், இளநீர், சர்க்கரை, கறுப்பு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து கிளாஸ்களில் ஊற்றி, ஆரஞ்சு ஐஸ்கட்டிகளை மிதக்கவிடவும். புதினா இலைகளை மேலே தூவவும்.

ட்ரிபிள் ஷாட் பானம்
தேவையானவை: பைனாப்பிள்பழத் துண்டுகள் - ஒரு கப், தோல் சீவி, நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகள் - 2 கப், இளநீர் - ஒன்றரை கப், உப்பு - சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்ஸியில் அடித்து கிளாஸ்களில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து சுவைக்கவும் (தேவைப்பட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்).

இளநீர் - வெனிலா டிரிங்க்
தேவையானவை: இளநீர் - ஒன்றரை கப், பைனாப்பிள் துண்டுகள் - ஒரு கப், ஐசிங் சுகர் - ஒரு டீஸ்பூன், வெனிலா ஐஸ்க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - சிறிதளவு, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் முதலில் பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு அடித்து... பிறகு, இளநீர், ஐசிங் சுகர், உப்பு, வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து அடித்து, எல்லாவற்றையும் நன்கு கலந்துவிடவும். நீளமான கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி, ஐஸ்கட்டிகள் சேர்த்து சுவைக்கவும்.

இளநீர் - எலுமிச்சை கூலர்
தேவையானவை: இளநீர் - 2 கப், தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 2 கப், எலுமிச்சைப் பழம் - 2, சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், புதினா இலைகள் - தேவையான அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
செய்முறை: ஒரு கப் தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கி, ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஒவ்வொரு குழியின் மேலேயும் ஒரு புதினா இலையை வைத்து, ஃப்ரீசரில் உறைய வைக்கவும். மீதியுள்ள ஒரு கப் தர்பூசணித் துண்டுகள், தோல் சீவிய இஞ்சி, இளநீர், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து, வடிகட்டவும். இதை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே புதினா வைத்த தர்பூசணி ஐஸ்கட்டிகளை மிதக்கவிட்டு, பரிமாறவும்.

இளநீர் - பப்பாளிப்பழ ஜூஸ்
தேவையானவை: இளநீர் - ஒன்றரை கப், இளநீர், வழுக்கை - ஒரு கப், தோல் சீவி, நறுக்கிய பப்பாளிப் பழத் துண்டுகள் - ஒரு கப், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: முதலில் பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் அடித்து, பிறகு இளநீர் வழுக்கையை சேர்த்து அடித்து, கடைசியாக இளநீரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து சுவைக்கவும் (தேவைப்பட்டால், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக