சனி, 13 அக்டோபர், 2012


நம்பி நாராயணனிடம் மன்னிப்பு!

கேரளாவில் ஒரு சரித்திர நிகழ்வு

து ஒரு வித்தியாசமான காட்சி!
 திருவனந்தபுரம் பிரஸ் கிளப் பில் கடந்த 7-ம் தேதியன்று, மலை யாளத்தின் பிரபல எழுத்தாளர்களும் பத்திரிகை யாளர்களும் தொலைக்காட்சிப் பிரதிநிதிகளும் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நடுநிலையாக உட்கார்ந்து இருந்தார் 'நாஸாவிஞ்ஞானி நம்பி நாராயணன். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகள் பல புரிந்து... இன்னும் சாதிக்க முனைந்திருந்த வேளையில், 'ராக்கெட் ரகசியத்தை வெளிநாட்டுக்குக் கடத்தினார்என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது ஆனவர் அவர். ''உங்களுக்கு நாங்கள் துரோகம் இழைத்து விட்டோம். உங்களைப் பற்றிய தவறான செய்திகளை எழுதி உங்களைக் காயப்படுத்தி விட்டோம். எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்'' என்று அனைவரும் தழுதழுக்க மன்னிப்புக் கோரிய சரித்திர நிகழ்வுதான் அது.
'நாஸாவில் 10 ஆண்டுகள் பணியாற்றி இந்தியா திரும்பி சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருபவரான டாக்டர் மதுவின் 'சமூகப் பாதுகாப்பு சமிதிசார்பில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஞ்சாநெஞ்சம் கொண்ட எழுத்தாளர் என்று புகழப்படும் பால் சக்கரியா, ஜெயகாந்தனுக்கு இணையானவர் என்று கேரளாவில் போற்றப்படும்
பி.ஆர்.பி.பாஸ்கர், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் முன்னாள் கேரள முதலமைச்சர் கருணாகரனின் மகன் முரளீதரன் போன்றோர், திரளாக வந்திருந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினர்.
எழுத்தாளர் பி.ஆர்.பி.பாஸ்கர், ''ராக்கெட் உளவு வழக்கு பரபரப்பாக கேரளாவில் நடந்தபோதே, அது பொய்யான வழக்கு என்ற என் சந்தேகத்தைத் தெரிவித்து இருக்கிறேன். இன்று என் சந்தேகம் உறுதியாகி விட்டது. சாமான்யனான எனக்கே அது புரிந்தபோது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அது புரியாமல்போனது எப்படி என்றுதான் தெரியவில்லை. தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருந்தார்களா என்று அவர்கள் மீது சந்தேகப்பட வேண்டியுள்ளது.  விஞ்ஞானியிடம் மன்னிப்பு கேட்கும் நிலையில் நாம் இருக்கிறோம். நான் பகிரங்க மன்னிப்புக் கோருகிறேன்!'' என்று பேசினார்.
நம்பி நாராயணனும் அவருடைய குடும்பமும் பட்ட கஷ்டங் களை எழுத்தாளர் பால்சக்கரியா மிகவும் உருக்கமாகப் கூறினார். ''அரசாங்கத்தையும், போலீஸையும், பத்திரிகைகளையும் கண் மூடித்தனமாக நம்பித்தான், ஒரு தவறான வழக்கை உண்மை என்று நம்பி தவறு செய்துவிட்டோம். மக்கள் சார்பாக நம்பி அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். இந்தத் தவறுக்கு பத்திரிகைகள்,  போலீஸ் உயர் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், அரசாங்கம் அத்தனை பேரும் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தில், இந்திய சரித்திரத்தில் நம் கேரள மாநிலம் ஒரு முன்னோடியாக, செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி வருந்துவதோடு அவருக்கான நஷ்டஈட்டுத் தொகை யும் வழங்கினால்தான் அது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பது என் கருத்து'' என்றார்.
முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகனும் எம்.எல்-ஏ.வுமான முரளீதரன், ''ராக்கெட் ரகசியம் கடத்தப்பட்டதாக புனையப்பட்ட ஒரு பொய் வழக்கில் என் தந்தை முன்னாள் முதல்வர் கருணாகரன் பலியாடு ஆக்கப்பட்டார். ஒரு குற்றமும் செய்யாத என் தந்தைக்குப் பதவி பறிபோனதற்கு இந்த வழக்குதான் காரணம். சுதந்திரத்துக்காகப் போராடி, இந்திராகாந்திக்குத் துணை நின்று வாழ்ந்த என் அப்பா வேறு குறைகளுக்காகப் பதவி இழந்து இருந்தால், அவ்வளவு வருத்தம் நேரிட்டு இருக்காது. ராஜதுரோகக் குற்றம் சாட்டி நீக்கியது எங்கள் குடும்பத்தை வாட்டி வருகிறது. அதில் இருந்து நாங்கள் மீளவே முடியவில்லை. அர சியல் காழ்ப்புஉணர்ச்சி காரணமாக எங்கள் கட்சியிலேயே உள்குத்து வேலை செய்து என் அப்பாவைப் பழிவாங்கி விட்டனர்.
இந்த வழக்கில் பொய்யை ஜோடித்த ஐ.பி.எஸ். அதிகாரி சிபி மேத்யூ, ஜோஸ்வா, இன்ஸ்பெக்டர் விஜயன் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்குக் கடிதம் கொடுக்க இருக்கிறேன்; காங்கிரஸ் தலைமைக்கும் கடிதம் எழுத இருக்கிறேன். நாட்டுக்கு உழைத்த ஒரு நல்லவரை நாம் ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டோம். அவருக்கு உடல், மனம், பொருள் ரீதியான துன்பங்கள் கொடுத்து, மன்னிக்க முடியாத குற்றம் செய்து விட்டோம்'' என்றார் உருக்கமாக.
இறுதியாகப் பேசிய விஞ்ஞானி நம்பி நாராயணன், ''உங்களது இந்த நடவடிக்கை என்னை மனநிறைவு அடைய வைத்துள்ளது. கார்த்திகேயன், அசோக்குமார், அருண் பகத், ஷர்மா உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு விதமாக, தனித்தனியாகப் புலனாய்வு செய்து, இது பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்று பதிவு செய்தனர். இந்தப் பொய்வழக்கு என் ஆராய்ச்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதனால், 10 ஆண்டுகள் நாடு பின்னுக்குப் போய்விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது'' என்றார் வருத்தத்துடன்.
இதுபோன்ற தவறுகள் இனியாவது நிகழாமல் இருக்கட்டும்!
- ஜே.வி.நாதன்,  
Thanks to  vikatan

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அண்ட்ராய்ட் பயன்பாடுகள் இப்போது விண்டோஸ் கணிணியிலும்

அண்ட்ராய்ட் பயன்பாடுகள் இப்போது விண்டோஸ் கணிணியிலும்:
தொழில்நுட்ப பதிவு போட்டு ரொம்பநாளாகி விட்டது. தொழில்நுட்பங்களை நொடிக்கு நொடி விளாசி பேசும் தளங்கள் பெருகிவிட்டதும், எந்த ஒரு சமாசாரமுமே எழுத உந்தும் அளவு மனதை பாதிக்காததும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். எங்கிருந்தோ திடீரென்று வந்த நண்பர் ஒருவர் ஒரு நல்ல தகவலை சொல்லிச் சென்றார். அந்த நண்பருக்கு நன்றிகள் பல.உங்கள் அண்ட்ராய்ட் செல்பேசிகளில் நீங்கள் பயன்படுத்தும் உங்கள் அபிமான பயன்பாடுகளை இப்போது விண்டோஸ் கணிணியிடும் பயன்படுத்தலாமாம். BlueStacks app player எனும் மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிவிட்டால் போதுமானது. அதே மொபைல் அப்ளிகேசன் பெரிய திரையில் உங்கள் கணிணியில் நல்ல வேகமாக ஓடுமாம். அப்ளிகேசன் டெவலப் செய்பவர்கள் கூட இதை சோதனைக்காக பயன்படுத்திக் கொள்ளலாமென நினைக்கிறேன். நல்ல புதுமையான முயற்சி. பீட்டாவாக இப்போது இருக்கும் போது இலவசம். முழுமையானதும் விற்கப்படலாம். வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சொல்லிட்டேன் எம்லின் சார்.நன்றி.
Follow me in Facebook
http://www.facebook.com/pkpblog
Source:pkp.blogspot.com Copyright 2011 www.PKP.in;. All rights reserved. Click here to email us

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

Apples


Apples are actually a pretty healthy snack staple, simply because they taste great and are packed with a number of other health benefits of Apples are packed with immune-boosting flavonoids, and have been known to satisfy hunger between meals. This is because apples contain a type of fiber called pectin, which in some cases has been shown to help people lose weight.
In other studies, like the Iowa Women’s Health Study, it was reported that consumption of apples may be linked to a lower risk of coronary heart disease and cardiovascular disease. Experts attributed these heart-healthy benefits to the antioxidant compounds found in apples.
Studies have also shown that people who eat more apples may be less likely to suffer from metabolic syndrome, a group of symptoms that is linked to an increased risk of heart disease and diabetes.

Pears


One of the biggest benefits of pears in regards to weight loss and health is that they are high in fiber. A medium size pear can contain as much as 6 grams of fiber. They also contain vitamins A, C, K, B2 and B3.
Pears are also a hypo-allergenic fruit, which means people with food sensitivities can easily incorporate them into a healthy diet.
Due to pear’s high fiber content, it is this fruit’s uncanny ability to keep you feeling fuller longer which helps prevent overeating.
A diet high in fiber also helps keep your cholesterol levels down, which is good news for your heart.

Recommended Calorie Intake


The FDA presents two recommended calorie intake levels, each with a guideline of 30% of total intake from fat calories.
For a female adult the level is around 2,000 calories per day, with 600 fat calories.
For a male adult the level is around 2,500 calories per day, with 750 fat calories.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் அனல் கிளப்பிய வேலு நாச்சியார்!



முதல் முதலில் பெண்கள் ராணுவம், உடையாள் படையை உருவாக்கியவர்.

 முதல் மனித வெடிகுண்டு குயிலியை உருவாக்கியவர்.

பூமராங் என்ற வளரிக் கலையில் தேர்ச்சி பெற்றவர்.

இந்தியாவின் முதல் கெரில்லா படையணி, கூராள் படை வைத்திருந்தவர்.

வெள்ளையர்களால் தோற்கடிக்க படாத ஒரே ராணி.

வெள்ளையர்கள் மன்னிப்புப் பட்டயம் எழுதிக்கொடுத்த ஒரே மகாராணி.

- இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர்தான், வீரத்தாய் வேலு நாச்சியார். இந்திய விடுதலைப் போராட்ட மரபில், வேலுநாச்சியாரின் பங்கு மிகப்பெரியது. வெள்ளையரை எதிர்த்து வீரத்துடன் போரிட்டுத் தோல்வி அடைந்த ஜான்ஸி ராணியைப் போற்றும் அளவுக்கு, வரலாறு வேலு நாச்சியாரைப் போற்றியது இல்லை. அந்த மறைக்கப்பட்ட கறுப்பு வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்கிறது 'வீரத்தாய் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம்.



ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் முயற்சியால் கடந்த ஆண்டு சென்னையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது வேலு நாச்சியார் நாடகம். வழக்கமான நாட்டிய நாடகங்களில், நடைமுறைக்குப் பொருந்தாத புராண, இதிகாசக் கதைகள் மட்டுமே உள்ளடக்கமாக இருக்கும். அதைக் கடந்து, முதன்முறையாக வரலாற்றை மீட்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த நாட்டிய நாடகத்துக்கு அப்போதே அமோக வரவேற்பு கிடைத்தது. ஸ்ரீராம் சர்மாவால் எழுதி இயக்கப்பட்டு, அவரது மனைவி மணிமேகலை, வேலு நாச்சியாராக நடித்த இந்த நாடகம், அதன்பிறகு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ஐக்கிய நாடுகள் சபையின் கலாசாரப் பிரிவு, வீரத்தாய் வேலு நாச்சியார் நாடகத்தை அரங்கேற்ற இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவில் நாடகம் முடித்து திரும்பிய ஸ்ரீராம் சர்மா, மணிமேகலை இருவரிடமும் பேசினோம். ''வரலாற்றை மீட்டெடுக்கும்

முயற்சியாகவே இந்த நாடகத்தை ஆரம்பித்தோம். இதற்காக வேலு நாச்சியார் வாழ்ந்த பகுதிகளில் ஐந்து ஆண்டுகள் ஆய்வு செய்தோம். நாடக வடிவம் பெற்றுவிட்ட பிறகு, அதற்குப் பொருள்உதவி செய்ய ஆள் இல்லாமல் தவித்தபோதுதான், வைகோ உதவி செய்து ஆதரித்தார்.

வெள்ளையரை எதிர்த்த மன்னர்கள் இந்தி​யாவில் நிறையப் பேர் இருக்கிறார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள் குறைவு. 1796, டிசம்பர் 25-ம் தேதி வேலு நாச்சியார் மரணம் அடைந்தார். அவருக்கு முன், மன்னராக இருந்த அவரது கணவர் முத்துவடுகநாதரை வெள்ளையர்கள் கொன்றனர். வேலு நாச்சியாருக்குப் பிறகு வந்த மருது பாண்டியர்களையும் கொன்றனர். ஆனால், இடையில் 20 ஆண்டு காலம் மகாராணி​யாக இருந்த வேலு நாச்சியாரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

பூமராங் என்று சொல்லப்​படும் எய்தவரிடமே திரும்பி வரும் ஆயுதப் போர்க்கலைக்கு தமிழ்நாடுதான் தாயகம். வளரி என்று சொல்லப்படும் இந்தக் கலையில் வேலு நாச்சியார் வல்லவர். காற்று வீசும் திசைக்கு எதிரியை வரவைத்து, வளரி அடித்தால் அது இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பி வரும். துப்பாக்கிகள், பீரங்கித் தொழில்நுட்பத்துடன் இருந்த வெள்ளையர்களை இந்த வளரி அச்சுறுத்​தியது.

வேலு நாச்சியாருக்கு தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது உட்பட ஆறு மொழிகள் தெரியும். திண்டுக்கல் கோட்டை உச்சியில் முகாமிட்டு இருந்த ஹைதர் அலியைத் தன் படை பரிவாரங்களுடன் சந்தித்து, உருது மொழியில் பேசி ஆயுதங்கள் கேட்டார். கணவனை இழந்த ஒரு பெண் இத்தனை தைரியத்துடன் வந்து, அதுவும் உருது மொழியில் பேசியதைக் கண்டு ஹைதர் அலி திகைத்தார்.



சாமி கும்பிடச் சென்ற தன் கணவன் முத்துவடுக​நாதனை இறைவன் சன்னதியில் நிராயுதபாணியாக சுட்டுக் கொன்ற ஆங்கிலேய கவர்னர் பாஞ்ஜோரை கத்தி முனையில் மடக்குகிறார் வேலுநாச்சியார். பாஞ்ஜோரின் கழுத்தில் வாள். அதுவரை ராணியாக இருந்த வேலு நாச்சியார் அந்தக் கணத்தில்தான் மகாராணி ஆகிறார். ஆம், தன் சொந்தப் பகை மறந்து கவர்னரை மன்னிக்கிறார். அந்த மன்னிப்பையும் பட்டயமாக எழுதித் தரச் சொல்கிறார். வெள்ளைக்கார கவர்னர் எழுதித் தந்த மன்னிப்புப் பட்டயம் இப்போதும் ஆவணமாக நம்மிடம் இருக்கிறது.

இந்த உண்மைகளை நாங்கள் நாட்டிய நாடகமாக நடத்தினோம்.. இதில் கதக், மைமிங், இண்டியன் ஃபோக், வெஸ்டர்ன், பரதம் எல்லாம் கலந்து கொடுத்ததால் நாடகம் விறுவிறுப்பாக இருக்கிறது'' என்றார்.
·                                                                                                                                                                    nandri vikatan

சனி, 4 ஆகஸ்ட், 2012

உணவு பாதுகாப்புச் சட்டவிதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட  தடை நீக்கம்.

உணவு பாதுகாப்புச் சட்டவிதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட  தடை நீக்கம்.:
                  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பிறப்பித்த விதிமுறைகளை அமல்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.
                உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த, பல விதிமுறைகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வகுத்தது. ஓட்டல், உணவு விடுதிகள் என, உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், உரிய அதிகாரியிடம் உரிமம் பெற வேண்டும், உணவுப் பொருட்களை பேக்கிங் செய்து லேபிள் ஒட்டி விற்க வேண்டும், உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், பரிசோதனைக் கூடங்களில் உணவு மாதிரியை சோதிக்க வேண்டும் என, பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன.
                  இந்த விதிமுறைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு உணவு விற்பனையாளர்கள் நலச் சங்கம் மனு தாக்கல் செய்தது. விதிமுறைகளுக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. மனுக்களை விசாரித்த ஐகோர்ட், விதிமுறைகளை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. தடை உத்தரவை நீக்கக் கோரி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியம் விசாரித்தார். ஆணையம் வகுத்த விதிமுறைகள், பார்லிமென்டின் இரு சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என, ஆணையத்தின் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் வாதாடினார்.
                      மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே, 1955ம் ஆண்டு முதல் இருக்கும் விதிமுறைகளை தான் இந்தப் புதிய விதிமுறைகளிலும் கையாண்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், விதிமுறைகளை அமல்படுத்துவதை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. இந்தச் சட்ட விதிகளை அமல்படுத்தாததற்காகவும், விதிமுறைகளை அறிவிக்காததற்காகவும், ஒரு கட்டத்தில் அதிகாரிகளை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது.
                        சட்டப் பிரிவுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த உத்தரவுகள், சுப்ரீம் கோர்ட் உத்தரவினால் தான் வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு தடை விதிக்கக் கூடாது. சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என, ஒரு கோர்ட் கேள்வி கேட்கும் போது, சட்டத்துக்கு மற்றொரு கோர்ட் தடை விதிப்பது என்பது முரண்பாடாக இருக்கும். எனவே, இடைக்காலத் தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தடை நீக்கப்படுகிறது. இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எல்லாம், வழக்கின் இறுதி விசாரணையின் போது முன்வைக்கப்படும் வாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவ்வாறு, நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
                            சக்தி மசாலா நிறுவனம் மற்றும் விவசாயப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டப் பிரிவுகளை எதிர்த்து, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவு 31(7) க்கு மட்டும் ஐகோர்ட் தடை விதித்திருந்தது. உணவு வர்த்தகத்தில் உள்ளவர்கள் உரிமம் பெற வேண்டும் மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும் என, இந்தப் பிரிவு வலியுறுத்துகிறது.
                          இந்த தடையையும் நீக்கக் கோரி, ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன், இது ஒன்றும் புதிய பிரிவு அல்ல. வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு உரிமம் பெற வேண்டும் என்பது, 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எனவே, இந்தப் பிரிவுக்கு தடை விதிக்க வேண்டியதில்லை. தடை நீக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
 நன்றி: தினமலர்

புதன், 25 ஜூலை, 2012

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும




கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.
1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.
5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக் காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.
6. பிளாப்பி டிஸ்க்/ சி.டி.டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.
8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.
9. CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.
10. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது. பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.
11. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.
12. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.
13. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.
14. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.
15. Non System Disk Error: ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக் கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
16. Missing Operating System: சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம்.
17. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.
18. IO Error: சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.
19. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.
20. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியானகேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
21. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோத னை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.
22. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.
23. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.
24. MMX/DLL FILE MISSING: இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.
பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

வியாழன், 7 ஜூன், 2012

கல்விக்கடன் - FAQs

கல்விக்கடன் - FAQs:
கல்விக்கடன் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கு

விடையளிக்கிறார் கல்விக்கடன் சேவைப்படையின்

ஒருங்கிணைப்பாளர் பிரைம் பாயிண்ட் சீனிவாசன்


+2 முடித்து விட்டேன். எனக்கு கல்விக்கடன் வேண்டும். யாரை தொடர்பு கொண்டு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (Indian Banker’s Association) கல்வி வளர்ச்சிக்கான மாதிரித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில்தான் கல்வி பெறுவதற்கான கடன் வசதி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது உதவித்தொகை அல்ல, கடன். வட்டியும் உண்டு. +2 முடித்த மாணவர்கள் தங்களுக்கு எந்தெந்த வகையில் உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) பெற என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முதலில் பரிசீலித்து, இறுதியாகவே கல்விக்கடன் பெற முயற்சிக்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் எந்த பொதுத்துறை/தேசிய வங்கியிலும் கல்விக்கடன் பெறலாம். வங்கி மேலாளரை அணுகி கல்விக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கடன் தரமுடியுமா முடியாதாவென்று விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து பதினைந்து முதல் முப்பது நாட்களுக்குள்ளாக வங்கிகள் மாணவர்களுக்கு பதில் அளித்தாக வேண்டும். கல்லூரியில் சேர்ந்தபிறகே வங்கியை அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் +2 தேர்வு எழுதியதுமே, மாணவருடன் பெற்றோரும் சென்று, அருகிலிருந்து வங்கிக்கு சென்று மேலாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆலோசனை கேட்டு வைத்துக் கொள்வது நலம்.

யார் யாருக்கெல்லாம் கல்விக்கடன் மறுக்கப்படும்?

கல்விக்கடன் பெற எல்லா மாணவர்களுக்கும் தகுதியுண்டு. ஆனால் வேலைவாய்ப்புக்கு வாய்ப்பில்லாத கல்விக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. கடன் என்பதால் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்கிற நியாயமான அச்சம் வங்கிகளுக்கு இருக்கிறது. அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு கண்டிப்பாக கல்விக்கடன் கிடைக்காது.

என்னென்ன சான்றிதழ்கள்/ஆவணங்கள் தரவேண்டும்?

+2 மதிப்பெண் சான்றிதழ், முகவரி சான்றுக்காக ரேஷன் அட்டை, பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூபாய் நாலரை லட்சத்துக்குள் இருந்தால், தாசில்தார் ரேங்கில் இருக்கும் அரசு அதிகாரி ஒப்பளித்த வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்துடன் கல்லூரியில் சேர்ந்தற்கு சான்றாக அட்மிஷன் கார்ட், மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதற்கான மதிப்பீடு (estimate) ஆகியவையையும் தந்தாக வேண்டும்.

கடனுக்கு பிணை அல்லது உத்தரவாதம் தரவேண்டுமா?

கடன் தொகை நாலு லட்ச ரூபாய் வரை இருந்தால் பிணையோ, உத்தரவாதமோ தேவையில்லை. நான்கு முதல் ஏழரை லட்சம் ரூபாய் வரை ஆக இருந்தால், மூன்றாம் நபர் ஜாமீன் தரவேண்டும். ஏழரை லட்சம் முதல் பத்து லட்ச ரூபாய் வரைக்குமேயானால் சொத்துபிணை வைக்கவேண்டியிருக்கும்.

வட்டிக்கு மத்திய அரசின் மானியம் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதை பெற என்ன செய்யவேண்டும்?

தொழில்நுட்பம் மற்றும் பணிசார்ந்த (professional) கல்வி பயில்பவர்களுக்கு வட்டி மானியம் உண்டு. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் இதற்காகத்தான் கேட்கப்படுகிறது. இச்சான்றிதழை வைத்தே வட்டிக்கு மானியத்தை மத்திய அரசிடம் வங்கிகள் கேட்டுப்பெற முடியும். கல்விக்கடன் பெறும்போதே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் வட்டிக்கு மானியம் குறித்த விளக்கங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் கடன் கொடுக்க மறுக்கும்/தாமதிக்கும் வங்கிகள் குறித்து யாரிடம் புகார் செய்ய வேண்டும்?

வங்கிகளில் எல்லா கிளைகளிலுமே, குறிப்பிட்ட அந்த வங்கிக்கு மண்டல மேலாளர் யாரென்று அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். கடன் தர மறுக்கும்/தாமதிக்கும் குறிப்பிட்ட வங்கியின் கிளை குறித்து மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அவரிடமும் நியாயம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் அந்த வங்கியின் தலைவருக்கு மின்னஞ்சல்/மடல்/தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாம். ரிசர்வ் வங்கி இம்மாதிரி கல்விக்கடன் குறித்த புகார்களை விசாரிக்கவென்றே சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கிறது. எந்த வங்கியாக இருந்தாலும் இவரிடம் புகார் அளிக்க முடியும்.

வட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறை என்ன? படிக்கும்போதே செலுத்த வேண்டுமா? படித்து முடித்து வேலை கிடைத்தபிறகு செலுத்திக் கொள்ளலாமா?

படிக்கும்போதே வட்டியையோ, கடனையோ திருப்பிக் கட்டச் சொல்லி எந்த வங்கி மேலாளரும் வற்புறுத்த முடியாது. படித்து முடித்து ஒருவருடம் கழித்து (அல்லது) வேலை கிடைத்த ஆறு மாதத்திற்குப் பிறகு அசலோடு வட்டியையும் சேர்த்து மாதாந்திரத் தவணையாக கட்டத் தொடங்க வேண்டும். கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் அவகாசம் தரப்படும்.

குடும்பச் சூழலால் பாதியில் படிப்பை விட்டு விட்டேன். நான் வாங்கிய கல்விக்கடனை வட்டியோடு திருப்பி செலுத்தியே ஆகவேண்டுமா?

ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி இது உதவித்தொகை அல்ல. கடன். எந்தச் சூழலிலும் கடன் என்றால் அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும்.

முதல் ஆண்டுக்கு கடன் கொடுத்துவிட்டு, இரண்டாம் அல்லது ஆண்டுகளில் கடன் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

இம்மாதிரி நிகழ்வது அபூர்வமானது. மாணவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நல்ல கல்வியை பெறவேண்டும் என்கிற சமூகநோக்கத்துக்காகவே கல்விக்கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கிவிட்டோமே என்று கடனுக்காக கல்லூரிக்குப் போய்வந்தால் அதை பெற்றோர் சகித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடன் கொடுத்த வங்கியால் நிச்சயம் சகித்துக் கொள்ள முடியாது. தங்களிடம் கடன் பெற்ற மாணவர்கள், அதைவைத்து ஒழுங்காக கல்வி கற்கிறார்களா என்று சரிபார்க்கவே வங்கி மேலாளர்கள் மதிப்பெண்களை விசாரித்து தெரிந்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்களை அக்கறையோடு கண்டிக்கிறார்கள். தங்களிடம் கடன் பெற்ற மாணவன் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையில் சேர்ந்து தங்கள் கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்று வங்கிகள் எதிர்ப்பார்க்கின்றன. முதல் ஆண்டுக்கு கொடுத்து, அடுத்த ஆண்டுக்கு மறுப்பது மாதிரியான விஷயங்கள் மிக மிக அரிதானது. இம்மாதிரியான விஷயங்களுக்கு துல்லியமான வரையறைகள் ஏதுமில்லை. ஆனால் நியாயமே இல்லாமல் மறுக்கப்படுகிறது என்றால் மண்டல மேலாளரிடமோ, வங்கித் தலைவரிடமோ அல்லது ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியிடமோ புகார் தெரிவிக்கலாம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் கல்விக்கடன் பெறமுடியும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

அப்படியெல்லாம் கிடையாது. அண்ணன் கடன் வாங்கியிருந்தால், தம்பிக்கோ தங்கைக்கோ கடன் தரமுடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. ஆனால் கடன் தொகை அண்ணன், தம்பிக்கும் சேர்த்து நாலு லட்ச ரூபாய்க்கு மேல் செல்லுமேயானால் பிணை, வைப்பு ஆகிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது வங்கி என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?

மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அதே நடவடிக்கைகள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கும் பொருந்தும். போலிஸ் விசாரணை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன். கடன் திருப்பிக் கட்ட மறுப்பவர் பணி செய்யும் நிறுவனத்தை கூட வங்கி அணுகலாம். கடன் என்றால், அதைத்திருப்பிக் கட்டத்தானே ஆக வேண்டும்?



கல்விக்கடன் சேவைப்படை

கல்விக்கடன் விஷயத்தில் மாணவர்களுக்கும், வங்கிகளுக்கும் பாலமாக கல்விக்கடன் சேவைப்படை (education loan task force) இயங்குகிறது. சமூக முன்னேற்றத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் தன்னார்வலர்களால் இது நடத்தப்படுகிறது. கல்விக்கடன் பெறுவதில் மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, விளக்கங்கள் தேவைப்பட்டாலோ இந்தப் படையினர் உதவுகிறார்கள். info@eltf.in என்கிற மின்னஞ்சல் முகவரியில் இவர்களை தொடர்பு கொள்ளலாம். eltf.in என்கிற இணையத்தளத்தில் கல்விக்கடன் குறித்த தகவல்களை பகிர்ந்து வைத்திருக்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

GUJARAT C.M MODI' S ACHEIVEMENT


INNOVATIVE MERGING OF JAL SHAKTI WITH URGASHAKTI FORGREENER TOMORROW!




My hearty wishes to the farmer brothers and sisters on the auspicious occasion of Akshaya Tritiya! May this day bring joy and prosperity in our lives!!!
On this occasion, I would like to share with you a pioneering initiative of the innovative merging of Jal Shakti with Urja Shaktiin Gujarat! Today, we will dedicate India’s first canal-top solar power project to the nation. This dream, considered unimaginable till recently, has become a reality today. Gujarat has indeed achieved the unthinkable. This project has been commissioned along a stretch on the Sanand Branch Canal of the Sardar Sarovar Project.It can produce 1 MW electricity and you would be surprised to know that it can save 1 crore litres of water per kilometer annually by preventing it from evaporating. This project has the ability to tackle both energy security and water security, thus leaving behind a green footprint for future generations.
This inauguration comes just a few days after the completion of another landmark project that brought laurels to Gujarat. On 19th April 2012 when our scientists made the nation proud by launching Agni V, Gujarat wrote a new chapter in the history of renewable energy by dedicating 600 MW solar power to the nation. When I travelled to Charanka to inaugurate the solar park, the largest in Asia, I was reminded of the day when we had come to lay the foundation for this very park a year ago. Back then, a concerted attempt was made to stall this historic initiative; all sorts of flimsy reasons were given. When I stood at the same site after a year, I saw with my own eyes that the people of Gujarat had given a fitting reply to these vested interests! Today, as things stand, Gujarat contributes 66% of the nation’s solar energy. This indeed is a proud moment for Gujarat and its people.
Friends, unlike many of the western countries, we are endowed with the blessings of the Sun God. It is in these rays of the sun that we saw immense opportunity and derived strength to scale new heights of development. Back in 2009, Gujarat took the bold inititative of announcing a Solar Power Policy. Even though the policy provided for the installation of 500 MW, power purchase arrangements for 968.5 MW were signed with 85 developers by 2010.
With such an ambitious project came the issue of adequate land. The innovative idea of Gujarat Solar Park at Charanka aims to provide a complete ecosystem for this sector’s growth. This solar park is the largest in Asia(spread around 5000 acres) and offers state of the art infrastructure, adequate utilization of wastelands, high solar radiations and world-class infrastructure. A heavy monsoon in 2011 did not deter the enthusiasm of either the Government or the developers. The project was completed within the stipulated deadline of 28th January 2012. The remarkable transformation brought about by this project in the lives of people of North Gujarat needs to be seen in order to believe.
Such initiatives can also be turned into hallmarks of fiscal prudence. In a period of 25 years, this 600 MW project will produce 24000 million median units of electricity. The same amount, if produced through coal would require a mammoth 12000 million kilograms of coal, which would mean a drain of Rs. 90000 million worth of foreign exchange from our coffers. Thus, embracing solar power through such projects truly is a ‘win-win’ situation.
A question that many people asked us was- Gujarat is a power surplus state, then why are you spending a whooping Rs. 2000 crore on renewable energy? The answer to this question is very simple. Today, we in Gujarat are determined to extend our might in the war against global warming and climate change. Having been victims of several natural disasters ranging from floods, droughts to earthquakes, we are fully aware of the adverse effects climate change can have.
We are investing our today for a robust tomorrow, for securing the future of our children and grandchildren.We are leaving behind a historic footprint, which no history or historian will be able to erase. You would be delighted to know that Gujarat is among the 4 governments in the world with a separate department for climate change. For me, this is more an issue of ‘Climate Justice’ rather than climate change.It is a concern for the poor people of the world, who are invariably the worst affected bythe consequences of climate change. Gujarat is determined to show that growth with a concern for future generations is possible. 
We now rent our houses, but did we ever imagine there would be a day when we will be renting our roofs?Through the PPP model, Gujarat government has floated the Gandhinagar Photovoltaic Rooftop Programme. Now, residents will have the opportunity of producing solar electricity on their rooftops and will even generate additional income from it! We dream of developing Gandhinagar as a model solar city. We also intend to extend this rooftop policy to other cities in Gujarat.
When there is such large-scale development, how can research and capacity building be left behind? While we want to make Gujarat a solar hub, we also want our youth to conduct pioneering research and provide effective energy solutions for future generations. In 2008, PDPU launched the School of Solar Energy, which was a first of its kind. We are actively supporting GERMI research and other innovation in the field of solar energy.
Will we be able to manage so many solar power plants without having a skilled local workforce? Absolutely not! Major training initiatives through Industrial Training Institutes (ITIs) will take research and training in this field to another level! 6 solar photovoltaic ITI labs have been established and students are already signing up to learn.
Today there are organizations like OPEC consisting of all oil producing nations. In future, what stops India from taking the lead in organizing all nations blessed with more sunrays? Perhaps India can play a major role in spearheading R&D. Such a move will go a long way in streamlining global energy needs.
In conclusion, I am reminded of Chief Seattle’s famous words, “We do not inherit the earth from our ancestors; we borrow it from our children.” Mahatma Gandhi also spoke on similar lines. The essence of these initiatives goes beyond the fact that they attract investments of Rs. 9000 crores or provide a steady stream of employment to 30,000 people. We have mammoth factories but if there is no coal or gas what is their use? When we run short of these non-renewable resources, we will turn towards Surya Shakti and to other sources of renewable energy. That is when the world will remember Gujarat’s efforts to ensure that our environment is not affected and our children lead healthy lives.
Narendra Modi

புதன், 18 ஏப்ரல், 2012

Mannipaaya - A Musical Short Film

                                                                                                                                                                   
This short film has my sis ' son rahul in the lead role .pls post ur comment on his acting

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

புரிந்தால் ரசிக்கலாம்

புரிந்தால் ரசிக்கலாம்: இங்குள்ள ஒவ்வொரு படத்தையும் கூர்ந்து நோக்கி அதில் புதைந்திருப்பதை நாம் புரிந்து கொண்டால் புல்லரித்து ஒரு புன்னகையை உதிர்க்கலாம்.
எங்கே முயற்சித்து பாருங்களேன்.


















Source:pkp.blogspot.com Copyright 2011 www.PKP.in;. All rights reserved. Click here to email us

செவ்வாய், 27 மார்ச், 2012

விவேகானந்தரின் விளக்கம்!

விவேகானந்தரின் விளக்கம்!:
ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார்.
விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர், விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார்.
அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம்.
ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் தத்துவங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, “சுவாமி, இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா? கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.
மன்னரின் அந்தக் கேள்வியைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்தார்.
மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப் போக்க முடியாது என்று அவர் நினைத்தார்.
வேறு எந்த வழியில் மன்னரின் ஐயத்தைப் போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய திருவுருவப் படம் கண்களில் பட்டது.
“அது யாருடைய உருவப் படம்?” என்று விவேகானந்தர் வினவினார்.
“என் தந்தையின் படம் இது” என்றார் மன்னர்.
“இது என்ன படமா? எவ்வளவு அவலட்சணமான உருவம்! இந்தப் படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்திருப்பதால் இந்த அறையின் அழகே கெட்டுப் போய்விடுகிறது. இதைக் கழற்றி சுக்குநூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்!” என்று கூறினார் விவேகானந்தர்.
அவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.
“சுவாமி… என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்! இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம்?” என்று ஆர்ப்பரித்தார்.
விவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, “மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.
உங்கள் தந்தையாரின் உருவப் படத்துக்கு உயிர் இல்லை. இது ஓர் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தை மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை காரணமாக இதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன” என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார் மன்னர்.


 

வெள்ளி, 23 மார்ச், 2012

உலகின் பணக்கார கிராமத்தில் ஒரு `விசிட்’!

உலகின் பணக்கார கிராமத்தில் ஒரு `விசிட்’!:
* நட்சத்திர ஓட்டல்கள்
* 60 மாடிக் கட்டிடங்கள்
* பிரமாண்ட ஷாப்பிங் மால்கள்
* வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள்
* பளபள சாலையில் சறுக்கிச் செல்லும் ஆடம்பர கார்கள்…

இவை எல்லாம் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கிறது,
உலகிலேயே பணக்கார கிராமமான சீனாவின் `ஹுவாக்ஸி’யில்! ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான ஹுவாக்ஸி, இன்று உலகையே வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏழை விவசாய சமூகம்தான் அங்கு இன்று பெரும் பணக்காரக் குழுமமாக வளர்ந் திருக்கிறது. தற்போது `மாதிரி சோசலிஷ கிராமம்’ என்று அழைக்கப்பட்டும் இக்கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர், உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரான வு ரென்பா. அவர் தனது முயற்சியை 1961-ம் ஆண்டு தொடங்கினார்.
ரென்பாவின் தொலைநோக்கு அடிப்படையிலான வழிகாட்டலும், புத்திசாலித்தனமான கடின உழைப்பும் ஹுவாக்ஸிக்கு அசுர பணக்கார அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன.
சில உதாரணங்களைப் பார்த்தால் புரியும். இங்குள்ள 328 அடி 60 மாடிக் கட்டிடம், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள அதிகபட்ச உயரக் கட்டிடத்துக்கு இணையா னது. லண்டன் மாநகரத்தில் உள்ள கட்டிடங்களைவிட உயரமானது. இந்தக் கட்டிடத்தின் 60-வது மாடியில் உள்ள பசு சிற்பம், ஆயிரம் கிலோ தங்கத்தாலானது.
சரி, ஹுவாக்ஸியின் செழுமையான வளர்ச்சியின் ரகசியம் என்ன?
பாரம்பரிய விவசாயத்தை நவீனம் சார்ந்த விவசாயத் தொழிலாக மாற்றினார்கள். அதில் ஏகப்பட்ட வருவாய் குவிந்ததும் அதை ஜவுளி, உருக்கு தொழிலில் திருப்பிவிட்டனர். எல்லாவற்றிலும் மிக முக்கியமாக இருந்தது கடுமையான உழைப்பு. அதுவும் ஒன்றுபட்ட உழைப்பு.
“ஆயிரம் கிலோ தங்கப் பசு சிற்பத்துக்கு 300 மில்லியன் யுவான் (ரூ. 235 கோடி) ஆனது. ஆனால் தற்போது இதன் மதிப்பு 500 மில்லியன் யுவான்” என்கிறார், 60 மாடிக் கட்டிடத்தில் வழிகாட்டியாகப் பணிபுரியும் இளம்பெண் டினா யாவோ. அந்த கட்டிடம், புதுக் கிராம கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளாக உயர்ந்து நிற்கிறது. உச்சியில், ஒரு பெரி…ய்ய தங்கப் பந்து வடிவமும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தக் கட்டிடத்தின் உச்சித் தளத்தில் தங்க சிற்பங்கள் என்றால், இதர தளங்களில் வெள்ளியால் ஆன பெரிய பெரிய விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. தங்க இழைகள் அங்குள்ள மார்பிள் தரையில் ஜொலிக்கிறது.
60 மாடிக் கட்டிடத்தை ஒட்டி நீளும் நூல் பிடித்த மாதிரியான தெருக்களில் மகா மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் முன்பு பி.எம்.டபிள்யூ கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
1998-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஹுவாக்ஸி, தற்போது தனிப்பெரும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
இந்த முன்னேற்றங்களுக்கு ஆரம்பத்தில் விதை போட்டவை ஆயிரத்து 600 குடும்பங்கள். `பங்குதாரர்கள்’ என்று அழைக்கப்படும் இவர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பங்குத் தொகை, சம்பளங்கள், போனஸ்கள் என்று பணம் குவிகிறது. ஒரு குடும்பத்தின் சராசரி வருட வருவாய் சுமார் ஒரு கோடி ரூபாய்.

ஆயிரம் கிலோ தங்கத்தில் உருவான பசு.
மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பங்களா, ஒரு கார், இலவச மருத்துவச் சேவை, சமையல் எண்ணை ஆகியவை இலவசம்.
சீனாவின் பிற பகுதிகள் உள்பட உலகமெங்கும் தாக்கிய பொருளாதார நெருக்கடி ஹுவாக்ஸியை தாக்கவில்லை. தனது தனி வழியில் கம்பீரமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. பிற பெருநகரங்களைப் போல இங்கும் வெளியிடங்களில் இருந்து தொழிலா ளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் காரணமான ரென்பாவு, “நாங்கள் எப்போதும் எங்கள் மக்களுக்கு எது நன்மை புரியுமோ அதைத்தான் செய்வோம்” என்கிறார். 86 வயதாகும் அவர், தற் போறு ஓய்வு பெற்றுவிட்டார். தந்தையின் வழிகாட்டலோடு இவரது மகன் கட்சிச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.
ஹுவாக்ஸியின் வெற்றிக் கதை, உலக மக்களை இக்கிராமத்தை வியப்போடு திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அவர்களில் பலர், அந்த `சூத்திரத்தை’ அறிந்துகொள்வதற்காக நேரடியாக இங்கு வந்து இறங்கிவிடுகிறார்கள். `பணச்செழுமை சுற்றுலா’ என்ற பெயரில் இங்கு ஓராண்டுக்கு வருவோர் எண்ணிக்கை 2 லட்சம். அந்த வகையிலும் ஹுவாக் ஸிக்கு பணம் கொட்டுகிறது. 2 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கும் அளவிற்கு, லோங்ஸி என்ற சர்வதேச ஓட்டலும் இங்குள்ளது.
 

INFORMATON


Please don’t delete this without forwarding.
Let it reach the 120 Crores Indians and the remaining if any.
Kindly, share this valuable information wherever possible.
1. If you see children Begging anywhere in INDIA , please contact:
“RED SOCIETY” at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand’s
of donor address. www..friendstosupport.org

3. Engineering Students can register in www.campuscouncil.com to
attend Off Campus for 40 Companies.
4. Free Education and Free hostel for Handicapped/Physically
Challenged children.
Contact:- 98420625019894067506.
5. If you find any important documents like Driving license, Ration
card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put
them into any near by Post Boxes. They will automatically reach the
owner and Fine will be collected from them.
6. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So
let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-
Don’t waste Water & Electricity.
-Don’t use or burn Plastics
7. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all
Human beings on earth.
“TREES DO IT FOR FREE”
“Respect them and Save them”
8. Special phone number for Eye bank and Eye donation: 04428281919
and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information
about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/
9. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba
Institute Banglore. 10.
Contact : 9916737471
10. Medicine for Blood Cancer!!!!
‘Imitinef Mercilet’ is a medicine which cures blood cancer. Its
available free of cost at “Adyar Cancer Institute in Chennai”. Create
Awareness. It might help someone.
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road , Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241
11. Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets
wasted, don’t hesitate to call 1098 (only in India ) – Its not a Joke,
This is the number of Child helpline.
They will come and collect the food. Please circulate this message
which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
“OUR FUTURE GENERATIONS”
Please don’t delete this without forwarding.
Let it reach the 
120 Crores Indians and the remaining if any.

நார்ச்சத்து…

நார்ச்சத்து…:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி.  பொதுவாக மனிதர்களுக்கு நோய் உண்டாவதற்கு முக்கியக் காரணம்  மனச்சிக்கலும், மலச்சிக்கலும் என்கின்றனர் சித்தர்கள்.  மனச்சிக்கலை சீராக்க யோகாசனம், தியானம், மற்றும் சரப்பயிற்சி உதவும்.  ஆனால், மலச்சிக்கலை சீராக்க சீரான உணவு முறை மட்டுமே உள்ளது.
எளிதில் சீரணமாகும் உணவுகளில் ஒன்றுதான் நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகள்.  நார்ச்சத்து மிகுந்த உணவுகளே மலச்சிக்கலை போக்கக் கூடியது.  மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மையும் கொண்டது.
நார்ச்சத்து மிகுந்த உணவுகளில் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், பெக்டின், லிக்னின் போன்றவை நிறைந்துள்ளன. இவை உணவை எளிதில் சீரணிக்கும் நொதிகளாகும்.
நார்ச்சத்து இருவகைப்படும்.  அவை,
நீரில் கரையும் நார்கள் (Soluble fiber)
நீரில் கரையாத நார்கள் (Insoluble fiber)
நீரில் கரையும் நார்கள்
இவை நீரில் கரையக்கூடியவை.  இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைத்து இரத்தத்தின் பசைத் தன்மை அதாவது கடினத் தன்மையைத் தடுக்கிறது.  இதனால் இரத்த அழுத்த நோயின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
நீரில் கரையாத  நார்கள்
செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்களின் செரிமானத்தைத் தூண்டி, உணவைச் செரிப்பித்து மலத்தை அதிகளவு வெளியேற்ற உதவுகிறது.
இரைப்பை, சிறுகுடல் பகுதியில் உள்ள கார்போ-ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தை நார்கள் குறைக்கின்றன.  இதனால் உடலில் அதிகளவு சர்க்கரை, கொழுப்பு சேர்வது குறைக்கப்படுகிறது.
நார்கள் குடலினுள் அதிகளவு நீரை உட்கிரகிக்கச் செய்கின்றன.  இதனால் வயிறு நிறைந்ததுபோல் உணர்வு ஏற்படும்.  இத்தன்மை உண்ணும் உணவின் அளவைக் குறைக்கிறது.  இதுவே உடல் எடை குறையவும் காரணமாகிறது.
மேலும் நார்கள் பித்த உப்புகள் (Bile salt) கொழுப்பு போன்றவற்றை குடல் உட்கிரகிக்கச் செய்யவிடாமல் தடுத்து வெளியேற்றுகிறது.  இதனால் குடலில் புண், அஜீரணக் கோளாறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நார்கள் இரத்தத்துடன் கலந்து அடர்த்தி குறைந்த லிப்போ புரதத்துடன் இணைந்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
புற்றுநோய்  தடுப்பு
நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் அதிகம் உட்கொள்பவர்களுக்கு GIT (Gastro Intestinal Tract) உணவுக் குழலில் புற்றுநோய் உண்டாவததைத் தடுப்பதாக அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  நார்கள் குடலின் உள் பகுதியில் உணவை சீரணித்து மீதப் பொருளை மலமாக்கி வேகமாக வெளியேற்ற உதவுகிறது.  இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது.  புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை மலத்துடன் சேர்த்து வெளியேற்றுவதால் புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தேவையற்ற நச்சுப் பொருள்களை நீக்க
நார்கள் அதிகளவு நீரை உட்கிரகிப்பதால் உண்ணும் உணவில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை எளிதாக மலத்துடன் வெளியேற்றுகின்றன.
நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் செரிமான மண்டலத்தில் மாற்றம் அடைவதற்கு நார்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
மாவுப் பொருள் சர்க்கரைப் பொருளாக மாற்றப்பட்டு, அது புரதம், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலம், கிளிசரோல் ஆக மாற்றமடைகிறது.  இத்தகைய மாற்றத்தை சீராக செயலாற்ற நார்கள் மிகவும் உதவுகின்றன.
ஒரு நாளைக்கு நார்ச்சத்து 28-35 கிராம் அளவு தேவைப்படுகிறது.
இவை கீரைகள், பசுமையான காய்கறிகள், பழங்கள் இவற்றில் அதிகமுள்ளது.  அதுபோல் அதிகம் தீட்டப்படாத அரிசி, கோதுமை, பார்லியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன.
எனவே நலமான வாழ்வுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்
;நன்றி- ஹெல்த் சாய்ஸ்